Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'தாய்மொழியில் தாயாருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும்போது இனம் புரியாத உணர்வு'

அன்னையர் தினம் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று அனுசரிக்கப்படவுள்ளது.  

வாசிப்புநேரம் -

அன்னையர் தினம் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று அனுசரிக்கப்படவுள்ளது.

நோய்ப்பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் நடப்பில் உள்ள வேளையில், வெளியே சென்று பொருள்களை வாங்க முடியவில்லையே என்ற ஏக்கம் பலரிடம் இருக்கலாம்.

அந்த ஏக்கத்தைப் போக்க, சில இந்திய நிறுவனங்கள் அன்பளிப்புப் பொருள்களை வீட்டிற்கே கொண்டுசேர்க்கும் முயற்சியில் இறக்கியுள்ளன.

வீட்டில் மட்டுமே பயன்படுத்தாமல் வெளியே போகும்போது கூட அன்பளிப்புப் பொருள் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தில் 'என் சுவாசக் காற்றே' என்னும் பையைத் தயாரித்துள்ளது TamilWithLove.

சொந்த முயற்சியில் அன்னைக்கு வாழ்த்து அட்டையைத் தயாரித்தால் சிறப்பாக இருக்கும் எனக் கருதி வாழ்த்து அட்டையைச் செய்யும் காணொளி ஒன்றை அதன் Facebook பக்கத்தில் வெளியிட்டுள்ளது KriyaiD.

நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் நடப்பில் இருக்கும் இவ்வேளையில், பாடங்கள், விளையாட்டுகள் என அனைத்தும் மாணவர்கள் இணையம் வழியாகக் கற்கின்றனர். கண்களுக்கு ஓய்வு தரவும் கைகளுக்கு வேலை கொடுக்கும் நோக்கில் அன்னையர் தினத்திற்கு வாழ்த்து அட்டைகளைச் சொந்தமாகத் தயாரித்தால் நன்றாக இருக்கும் என்று கருதினேன்.

- தேவி விஜயன்

எளிய முறையில் தாளைக்கொண்டு எவ்வாறு வாழ்த்து அட்டையை வடிவமைக்கலாம் என்பதைக் காணொளி எடுத்துக்காட்டுகிறது. வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து எவ்வாறு அச்சு செய்து அசத்தலாம் என்பதும் அதில் சித்திரிக்கப்பட்டுள்ளது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்