Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போக்குவரத்து அதிகாரியை ஏமாற்றித் தப்பித்த இளையர்கள் கைது

வாகன  ஓட்டுநர் உரிமம் இல்லாத 21 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் அவருடன் பயணம் செய்த 18 வயது நபரும் பிடிபட்டுள்ளனர். 

வாசிப்புநேரம் -
போக்குவரத்து அதிகாரியை ஏமாற்றித் தப்பித்த இளையர்கள் கைது

கோப்புப்படம்: Jeremy Long

வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாத 21 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் அவருடன் பயணம் செய்த 18 வயது நபரும் பிடிபட்டுள்ளனர். 

தெம்பினிஸ் விரைவுச்சாலையில் இன்று சுமார் 4 மணியளவில் போக்குவரத்து அதிகாரி அவ்விருவரையும் சோதனைகளுக்காக நிறுத்தச் சொன்னார்.

ஆனால் அவர்கள் நிறுத்தாமல் தொடர்ந்து சென்றனர்.

அதில் அவர்கள் பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனத்தைச் செலுத்தினர்.

இதனால் போக்குவரத்து அதிகாரி அவர்களைத் துரத்த ஆபத்தான வகையில் செல்ல வேண்டியிருந்தது.

அவர்கள் இருவரும் அங் மோ கியோ அவென்யூ 5இல் உள்ள கழக வீட்டின் கீழ்த்தளத்தில் இருந்த தூண்களின் இடையே நுழைந்து, அபாயகரமாக வண்டியை ஓட்டித் தப்பித்தனர்.

11 மணி நேரத்திற்குப் பின், கண்காணிப்புக் கேமராப் பதிவுகளின் மூலம் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 5000 வெள்ளி வரையிலான அபராதம், 12 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்