Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

திரையரங்கில் காலை ஆட்டுவதை நிறுத்தச் சொன்னதற்காகத் தாக்கிய ஆடவர்

திரையரங்கில் காலை ஆட்டுவதை நிறுத்துமாறு கேட்டவரையும் அவருடைய மனைவியையும் தாக்கிய ஆடவருக்கு ஒரு நாள் சிறைத்தண்டனையுடன் 3,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
திரையரங்கில் காலை ஆட்டுவதை நிறுத்தச் சொன்னதற்காகத் தாக்கிய ஆடவர்

(கோப்புப்படம்: Reuters)

திரையரங்கில் காலை ஆட்டுவதை நிறுத்துமாறு கேட்டவரையும் அவருடைய மனைவியையும் தாக்கிய ஆடவருக்கு ஒரு நாள் சிறைத்தண்டனையுடன் 3,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

23 வயது கிலிஃப்டன் வொங் ஜுன் ஹான் (Clifton Wong Jun Han) இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் செங்காங்கிலுள்ள சிலேத்தார் கடைத்தொகுதியின் Shaw திரையரங்கில் திரைப்படம் பார்க்கச் சென்றிருக்கிறார்.

வோங்குடன் அவருடைய மனைவியும் இருந்தார்.

இருவரும் பாதிக்கப்பட்ட நபர், அவருடைய மனைவி அருகில் உட்கார்ந்தனர்.

திரைப்படத்தின்போது தொடர்ந்து காலை ஆட்டிய வோங்கிடம் அதை நிறுத்தும்படி கூறியிருக்கிறார் பாதிக்கப்பட்ட ஆடவர்.

கொஞ்ச நேரத்துக்குப் பின் திரைப்படம் முடிவடைந்ததும் வெளியேறும் வழியில் வோங் தவறுதலாகப் பாதிக்கப்பட்டவரின் காலை மிதித்துவிட்டார்.

அதைத் தொடர்ந்து வோங் அவரைத் திட்டிவிட்டுப் பின்னர் முகத்தில் பலமுறை குத்தியிருக்கிறார்.

பாதிக்கப்பட்டவரின் மனைவி, வோங்கைத் தடுக்க முயன்றபோது அவருக்கும் குத்து விழுந்தது.

வோங்கின் மனைவியும் பொதுமக்களில் சிலரும் அவரைக் கட்டுப்படுத்தினர்.

பாதிக்கப்பட்ட ஆடவரும் அவருடைய மனைவியும் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

ஆடவருக்குத் தலையிலும் கண்ணிலும் காயங்கள்.

மனைவிக்குக் கையில் காயங்கள்.

வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திய குற்றத்துக்காக வோங்கிற்கு அதிகபட்ச தண்டனையாக ஈராண்டு சிறைத்தண்டனையும் 5,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்