Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சுமார் 170,000 வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது சிங்கப்பூரின் கடல்துறை

பலதரப்பட்ட கடல்துறை வர்த்தகங்களுக்கு சிங்கப்பூர் தொடர்ந்து ஒரு தளமாக இருந்து வருகிறது. 

வாசிப்புநேரம் -
சுமார் 170,000 வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது சிங்கப்பூரின் கடல்துறை

(படம்: AFP)

பலதரப்பட்ட கடல்துறை வர்த்தகங்களுக்கு சிங்கப்பூர் தொடர்ந்து ஒரு தளமாக இருந்து வருகிறது. 5,000க்கும் மேற்பட்ட கடல்துறை நிறுவனங்களிலிருந்து சுமார் 170,000 வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டதாகப் போக்குவரத்து, சுகாதாரத் துறைகளுக்கான மூத்த துணையமைச்சர் லாம் பின் மின் கூறினார்.

சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குக் கடல்துறை 7 விழுக்காடு பங்களித்துள்ளதாக சிங்கப்பூர்க் கடல்துறை அறநிறுவனத்தின் புத்தாண்டு நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

தொடர்ந்து வளர்ச்சி கண்டு வரும் துறையில் கடந்தாண்டு கொள்கலன்களின் எண்ணிக்கை 8.7 விழுக்காடு அதிகரித்தது. கடந்தாண்டு கைமாறிய சரக்குகளின் எடை 630 மில்லியன் டன். இது 2017ஆம் ஆண்டின் அளவுக்கு ஒப்பானது. உலகின் தலைசிறந்த துறைமுகங்களில் ஒன்றாக சிங்கப்பூர் இருப்பதாய் நிகழ்ச்சியில் கூறினார் டாக்டர் லாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்