Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் எஞ்சியுள்ள MPH புத்தகக் கடைகள் இரண்டும் செப்டம்பருக்குள் மூடப்படும்

சிங்கப்பூரில் பிரபலமான MPH புத்தகக் கடைகளில் இரண்டு மட்டுமே தற்போது எஞ்சியுள்ளன. அந்த இரண்டும், வரும் செப்டம்பர் மாதத்துக்குள் மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் எஞ்சியுள்ள MPH புத்தகக் கடைகள் இரண்டும் செப்டம்பருக்குள் மூடப்படும்

(படம்: Parkway Parade website)

சிங்கப்பூரில் பிரபலமான MPH புத்தகக் கடைகளில் இரண்டு மட்டுமே தற்போது எஞ்சியுள்ளன. அந்த இரண்டும், வரும் செப்டம்பர் மாதத்துக்குள் மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஃபிள்ஸ் சிட்டியிலுள்ள புத்தகக் கடை, இம்மாதம் 28ஆம் தேதியோடு மூடப்படும். அதுவரை அங்கு குறைந்த விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும்.

பார்க்வே பரேடில் (Parkway Parade) உள்ள மற்றொரு கடை, செப்டம்பர் முதல் தேதி மூடப்படும்.

மிதமிஞ்சிய வாடகை காரணமாகவே, புத்தகக் கடைகள் மூடப்படுவதாக அதன் பொது மேலாளர் ஐவி டான் தெரிவித்தார். இருப்பினும், புதிய இடத்தில் கடை திறப்பது பற்றிப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

தற்போதைய கடைகளில் உள்ள ஊழியர்கள், புதிய கடைக்கு மாற்றிவிடப்படுவர்.

1815ஆம் ஆண்டு, MPH Bookstores என்னும் பெயரில் மலாக்காவில் தொடங்கிய புத்தகக் கடை, 1890ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்தது.

இலக்கியங்களைப் பதிப்பிக்கும் நோக்கில், அந்தப் புத்தகக் கடை தொடங்கப்பட்டதாக அதன் இணையப்பக்கம் தெரிவித்தது.

ஸ்டாம்போர்ட் ரோட்டில், பிரபலமான சிவப்புச் செங்கல் கட்டடத்தில் செயல்பட்டுவந்த MPH புத்தகக் கடை, 2002இல் மூடப்பட்டது.

இணைய வாசிப்பு அதிகரித்துவரும் சூழலிலும், தாள் புத்தகங்கள் தொடர்ந்து செல்வாக்குடன் திகழுமென, MPH நம்பிக்கை கொண்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்