Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

mRNA வகை COVID-19 தடுப்பூசிகளால் இதய அழற்சி ஏற்படும் அபாயம் மிகக் குறைவு: சிங்கப்பூர் நிபுணர்க் குழு

mRNA வகை COVID-19 தடுப்பூசிகளால் இதய அழற்சி ஏற்படும் அபாயம் மிகக் குறைவு: சிங்கப்பூர் நிபுணர்க் குழு

வாசிப்புநேரம் -
mRNA வகை COVID-19 தடுப்பூசிகளால் இதய அழற்சி ஏற்படும் அபாயம் மிகக் குறைவு: சிங்கப்பூர் நிபுணர்க் குழு

(படம்: Jeremy Long)

mRNA தொழில்நுட்பத்தைக் கொண்ட COVID-19 தடுப்பூசியை இரண்டாவது முறை போட்டுக்கொண்ட பிறகு, இதய அழற்சி ஏற்படக்கூடிய மிகக் குறைவான அபாயம் உள்ளதாக, சிங்கப்பூர் நிபுணர்க் குழு தெரிவித்துள்ளது.

அது குறித்த அனைத்துலக அறிக்கைகளை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அது குறிப்பிட்டது.

இஸ்ரேலிலும் அமெரிக்காவிலும் இரண்டாவது தடுப்பூசிக்குப் பிறகு இதய அழற்சி ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாய் கூறப்படுகிறது.

பெரும்பாலும் பதின்ம வயதினருக்கும் 25 வயதுக்குக் குறைந்த இளம் ஆடவர்களுக்கும் அத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வேறு எந்த நாட்டிலும் அது போன்ற சம்பவங்கள் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

இருப்பினும் இரண்டாவது தடுப்பூசிக்கும் இதய அழற்சிக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுவதாகச் சுகாதார அறிவியல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

தொடர்பு குறித்து அது இன்னும் எந்த முடிவுக்கும் வரவில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்