Images
  • MRT (1)
    படம்: Ernest Chua/TODAY

பாசிர் ரிஸ் - அல்ஜூனிட் இடையிலான ரயில் போக்குவரத்தில் பாதிப்பு

கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் இன்று மாலை உச்ச நேரத்தில், ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

பாசிர் ரிஸ் - அல்ஜூனிட் நிலையங்களுக்கு இடையே சேவை பாதிக்கப்பட்டது.

ரயில்களின் தாமதம் குறித்து SMRT இரவு மணி 7:11-க்கு Twitter மூலம் தகவல் வெளியிட்டது.

பாசிர் ரிஸ் - அல்ஜூனிட் இடையில் ரயில் சேவை இல்லை என்றும், பயண நேரம் 20 நிமிடங்கள் அதிகரிக்கும் என்றும் அது குறிப்பிட்டது.

பூகிஸ் நிலையத்தில் இருந்து பாசிர் ரிஸ் நிலையத்திற்கு இலவசப் பேருந்துச் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

ரயில் சேவையில் ஏற்பட்ட பாதிப்பு படிப்படியாகச் சீரடைந்து வருவதாக SMRT தெரிவித்தது.

ரயில் போக்குவரத்தில் ஏற்பட்ட தாமதம் குறித்து இணையவாசிகள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.  

Top