Images
  • Msia welcomes talk (1)

சிங்கப்பூருடன் கடல்துறை விவகாரம் குறித்துப் பேச்சு நடத்துவதை மலேசியப் பிரதமர் மகாதீர் வரவேற்கிறார்

கடல்துறை விவகாரம் குறித்து சிங்கப்பூருடன் பேச்சு நடத்தவதை வரவேற்பதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது இன்று (டிசம்பர் 8) கூறியிருக்கிறார்.

சிங்கப்பூருடனான கடல்துறை விவகாரம் சட்டரீதியான வழிகள், உரிமைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் எனச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறினார்.

இருதரப்பு பேச்சு நடக்கும்வரை உறுதியான இறுதியான பதில் கொடுக்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மலேசிய அரசாங்கக் கப்பல்கள் சிங்கப்பூர் நீர்ப் பகுதிக்குள் நுழைவது குறித்த கேள்விக்கு அவர் தெளிவான பதிலைக் கொடுக்கவில்லை.

கடல் எல்லை, ஆகாயவெளி குறித்த சர்ச்சைகளை சுமுகமாய்ப் பேசித் தீர்க்க முடியும் என்று நம்புவதாக மலேசிய உள்துறை அமைச்சர் முகைதீன் யாசின் கூறினார்.

ஜொகூரில் பேசிய அவர், தேவையற்ற பூசல்களைத் தவிர்ப்பது அவசியம் என்றார்.

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான உறவு நல்ல நிலையில் இருப்பதைச் சுட்டிய அவர், இரு நாடுகளும் இணக்கமாகச் செயல்பட முயற்சி செய்வதாகக் கூறினார்.

சர்ச்சையைத் தீர்க்கத் தற்போது பொறுப்பிலுள்ள அமைச்சர் தம்மால் ஆன அனைத்தையும் செய்வார் என்று தாம் நம்புவதாகத் திரு. முகைதீன் நம்பிக்கை தெரிவித்தார்.
 

Top