Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மரண தண்டனையை எதிர்நோக்கும் மலேசியரின் வழக்கில் சட்ட வழிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டன: அதிபர் ஹலிமா

மலேசியாவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் நாகேந்திரன் தர்மலிங்கத்தின் வழக்கில் சட்ட வழிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டதாக அதிபர் ஹலிமா யாக்கோப் (Halimah Yacob) தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
மரண தண்டனையை எதிர்நோக்கும் மலேசியரின் வழக்கில் சட்ட வழிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டன: அதிபர் ஹலிமா

(படம்: AFP/Roslan Rahman)

மலேசியாவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் நாகேந்திரன் தர்மலிங்கத்தின் வழக்கில் சட்ட வழிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டதாக அதிபர் ஹலிமா யாக்கோப் (Halimah Yacob) தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் மரண தண்டனையை எதிர்நோக்கும் நாகேந்திரனுக்குக் கருணை அளிக்குமாறு மலேசிய மாமன்னர் திருவாட்டி ஹலிமாவிற்குக் கடிதம் எழுதியதாக Malaysian Insight செய்தி நிறுவனம் கூறியது.

அதைத் தொடர்ந்து திருவாட்டி ஹலிமா அவ்வாறு பதிலளித்ததாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

சென்ற மாதம் 12ஆம் தேதி, நாகேந்திரனின் வழக்குத் தொடர்பில் பிரதமர் லீ சியென் லூங்கும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் மலேசியத் தலைவர்களுக்குப் பதிலளித்ததாகவும் அது சொன்னது.

நாகேந்திரனின் மரண தண்டனை நவம்பர் 10ஆம் தேதி நிறைவேற்றப்பட வேண்டியது.

ஆனால் அதற்கு ஒரு நாள் முன்பு, அவருக்குக் கிருமித்தொற்று உறுதியானதால் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.

2009-ஆம் ஆண்டில் 42.72 கிராம் போதைமிகு அபினை இறக்குமதி செய்ததன் தொடர்பில் நாகேந்திரனுக்கு 2010-ஆம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவரின் மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டன.

-CNA/lk(rw)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்