Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மலேசிய ரிங்கிட்டுக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு 6 மாதம் காணாத குறைவு

மலேசிய ரிங்கிட்டுக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு 6 மாதம் காணாத அளவுக்கு இன்று குறைந்தது. 

வாசிப்புநேரம் -
மலேசிய ரிங்கிட்டுக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு 6 மாதம் காணாத குறைவு

(படம்: AFP/Roslan RAHMAN)

மலேசிய ரிங்கிட்டுக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு 6 மாதம் காணாத அளவுக்கு இன்று குறைந்தது.

மலேசியா, நான்காம் காலாண்டில் அதன் பொருளியல் வளர்ச்சியடைந்ததாக இன்று ( பிப்ரவரி 14) அறிவித்ததைத் தொடர்ந்து மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்தது.

ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு 2.9912 ரிங்கிட் என்ற அளவில் நாணயப் பரிவர்த்தனை இடம்பெற்றது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21இலிருந்து ஆகக் குறைவான பரிவர்த்தனை விகிதம் இது.

கடந்த அக்டோபரிலிருந்து ஒரு சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு 3 ரிங்கிட்டுக்குக் கீழ் குறைந்தது இதுவே முதன்முறை.

இறுதிக் காலாண்டில் மலேசியப் பொருளியல் 4.7 விழுக்காடு வளர்ச்சி கண்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது.

முன்னதாக அது, 4.4 விழுக்காடு வளர்ச்சி காணுமென முன்னுரைக்கப்பட்டிருந்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்