Images
  • முகாபே
    (படம்: AFP)

சிங்கப்பூரிலிருந்து சொந்த நாட்டுக்குத் திரும்பும் முகாபேயின் நல்லுடல்

ஸிம்பாப்வேயின் (Zimbabwe) முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபேயின் (Robert Mugabe) நல்லுடல் சொந்த நாட்டில் அடக்கம் செய்யப்படுவதற்காக சிங்கப்பூர் விமான நிலையத்திலிருந்து
இன்று காலை புறப்பட்டது.

நீண்ட நாள்களாக உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த முகாபே கடந்த வெள்ளிக்கிழமை மாண்டார்.

அவருக்கு வயது 95.
ஸிம்பாப்வே தலைநகர், ஹராரேயில் உள்ள விளையாட்டரங்கத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும்.

சுமார் 40 ஆண்டுகளாக ஸிம்பாப்வேயின் அரசியலில் இருந்த முகாபே 2017ஆம் ஆண்டு பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
 

Top