Images
  • red bean jam
    படம்: வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம்

MUJI நிறுவனத்தின் உணவுப் பொருள் மீட்பு

MUJI (Singapore) நிறுவனத்தின் 'Mini Dorayaki - Red Bean Jam Pancake' உணவுப் பொருள் மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அந்த உணவுப் பொருளின் பொட்டலம் சிலவற்றில் பூஞ்சனம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கை நடைபெற்றது.

வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் அதனைத் தெரிவித்தது. உணவுப் பொருளை வாங்கிய வாடிக்கையாளர்கள், அதனை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பணத்தைத் திருப்பிப் பெற்றுகொள்ள, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் MUJI கடைகளில் உணவுப் பொருளைத் திருப்பித் தரலாம். 

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் 6346 4123 என்ற எண்ணைத் தொடர்புகொண்டோ customerservice@muji.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொண்டோ பணத்தைத் திரும்பப் பெற முடியும்.


Top