Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலையில் நச்சுணவுச் சம்பவங்கள்

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு நச்சுணவுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் சுகாதாரக் குறைபாடுகளும் கடந்த ஈராண்டுகளில் பதிவாகின. 

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலையில் நச்சுணவுச் சம்பவங்கள்

படம்: NUS students

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு நச்சுணவுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் சுகாதாரக் குறைபாடுகளும் கடந்த ஈராண்டுகளில் பதிவாகின. 

மாணவர்கள் சிலர் தங்கள் உணவுகளில் பூச்சி இருப்பதைக் கண்டனர். அங்கிருக்கும் காப்பிக் கடையில் எலி, கரப்பான் பூச்சி ஆகியவற்றையும் பார்த்துள்ளனர்.

Ridge View Residential Collegeஇல் தங்கியிருந்த 22 பேர் நோய்வாய்ப்பட்டனர். இரண்டு வாரங்களுக்குப் பின்னர், பல்கலைக்கழகத்திற்கு உணவு வழங்கும் விநியோகிக்கும் நிறுவனத்திடம் விசாரணை நடத்தப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை Prince George’s Park (PGP) House என்னும் மாணவர் தங்கும் விடுதியில் 5 பேர் இரைப்பைக் குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து சிங்கப்பூர் உணவு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்