Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மறைந்த தொழிற்சங்கவாதி G. முத்துக்குமாரசாமிக்குப் பிரதமர் லீ அஞ்சலி

காலஞ்சென்ற தொழிற்சங்கவாதி திரு. G. முத்துக்குமாரசாமிக்குப் பிரதமர் லீ சியென் லூங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
மறைந்த தொழிற்சங்கவாதி G. முத்துக்குமாரசாமிக்குப் பிரதமர் லீ அஞ்சலி

(படம்: Facebook/Lee Hsien Loong)

காலஞ்சென்ற தொழிற்சங்கவாதி திரு. G. முத்துக்குமாரசாமிக்குப் பிரதமர் லீ சியென் லூங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை நாட்சம்பள ஊழியர் இணைப்புச் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு. முத்துக்குமாரசாமி வெள்ளிக்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 68.

அக்டோபரில் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் பேராளர் கூட்டத்தில் திரு. முத்துக்குமாரசாமியைக் கடைசியாகப் பார்த்ததாய் தம் Facebook பதிவில் குறிப்பிட்டார் திரு. லீ.

27 ஆண்டுகள் பொதுச்சேவையில் இருந்த திரு. முத்துக்குமாரசாமி, நாட்சம்பள ஊழியர்கள் வேலையில் இருப்பதை உறுதி செய்ததோடு அவர்களின் திறன்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தியதாகத் திரு. லீ கூறினார்.

ஊழியர்களுக்காகத் திறன் மேம்பாட்டுத் திட்டங்களைத் தேடித் தந்த திரு. முத்துக்குமாரசாமியின் ஈடுபாட்டையும் போராடும் மனப்பான்மையையும் அவர் பாராட்டினார்.

அதனால்தான் முன்னாள் பிரதமர் திரு. லீ குவான் இயூவின் இறுதிச் சடங்கில் திரு. முத்துக்குமாரசாமி புகழுரை படிப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றார் பிரதமர்.

திரு. முத்துக்குமாரசாமியின் மறைவுக்குப் பின் பொதுத்துறை நாட்சம்பள ஊழியர் இணைப்புச் சங்கம் அவரின் உழைப்பைத் தொடரும் என்று நம்புவதாகக் கூறினார் அவர்.

திரு. முத்துக்குமாரசாமியின் இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்