Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொங்கோல்-செங்காங் பகுதியில் 3 மாபெரும் குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள்

பொங்கோல்-செங்காங் பகுதியில், 2000 சிறுவர்களைக் கவனித்துக்கொள்ளக்கூடிய 3 மாபெரும் குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் திறக்கப்படும்.

வாசிப்புநேரம் -
பொங்கோல்-செங்காங் பகுதியில் 3 மாபெரும் குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள்

படம்: Corine Tiah

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

பொங்கோல்-செங்காங் பகுதியில், 2000 சிறுவர்களைக் கவனித்துக்கொள்ளக்கூடிய 3 மாபெரும் குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் திறக்கப்படும்.

அடுத்த ஈராண்டில் அவை திறக்கப்படும்.

தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் First Campusஇன் My First Skool அமைப்பு அந்தத் தகவலைத் தெரிவித்தது.

தனது முதலாவது ஆகப் பெரிய குழந்தைப் பராமரிப்பு நிலையத்தைப் பொங்கோலில் இன்று அது அதிகாரபூர்வமாகத் திறந்தது.

கடந்த சுமார் ஓராண்டாகச் செயல்பட்டுவரும் அதன் பரப்பளவு 8,700 சதுர மீட்டர்.

அதில் அதிகபட்சமாக 1,065 பிள்ளைகளைப் பராமரிக்கமுடியும்.

பிள்ளைகள் எதையும் பார்த்து, கேட்டு, தொட்டு உணர்ந்து கொள்வதை  ஊக்குவிக்கும் வகையில் வெளிப்புற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் இங்கு செய்துதரப்பட்டுள்ளன.

நிலையத்தில் தற்போது சுமார் 110 ஆசிரியர்களும் 600க்கும் அதிகமான பிள்ளைகளும் உள்ளனர்.

அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் எண்ணிக்கை அதிகபட்ச அளவைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிய அளவில் உணவைத் தயார்செய்ய நிலையத்தில் சமையலறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது 140க்கும் அதிகமான My First Skool நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்