Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அன்பர் தினத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ‘MyROMStory’திட்டம்

இன்று அன்பர் தினம். அதை முன்னிட்டு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும், சிங்கப்பூர் நினைவுத் திட்டமும், திருமணப் பதிவகத்துடன் இணைந்து ‘MyROMStory’ திட்டத்தை அறிமுகம் செய்திருக்கின்றன. 

வாசிப்புநேரம் -
அன்பர் தினத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ‘MyROMStory’திட்டம்

(படம்: MSF)

இன்று அன்பர் தினம்.

அதை முன்னிட்டு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும், சிங்கப்பூர் நினைவுத் திட்டமும், திருமணப் பதிவகத்துடன் இணைந்து ‘MyROMStory’ திட்டத்தை அறிமுகம் செய்திருக்கின்றன.

சிங்கப்பூரர்கள் தங்களது திருமணப் பதிவுநாள் அனுபவங்களையும் நினைவுகளையும் பகிர்ந்துகொள்வதே அதன் நோக்கம்.

சிங்கப்பூர் நினைவுத் திட்டத்தின் இணையப்பக்கத்தில்: (http://www.singaporememory.sg/campaigns/myromstory) மக்கள் தங்களின் கல்யாணப் படங்களைப் பதிவேற்றலாம்.

அவர்களின் திருமண நினைவுகளையும் பகிர்ந்துகொள்ளலாம்.

இது, சிங்கப்பூரர்கள் தங்களது திருமணப் பயணத்தை நினைவுகூர்வதற்கு வழிவகுக்கிறது.

மேலும், காதலர் தினத்தை முன்னிட்டு, திருமணப் பதிவகம் மற்ற சில நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறது.

இன்று திருமணப் பதிவகத்திற்குச் செல்பவர்கள், அங்கே பொருத்தப்பட்டிருக்கும் பூக்கள் நிறைந்த சுவரின் பின்னணியில் படம் எடுத்துக்கொள்ளலாம்.

அங்கே தேசிய மரபுடைமைக் கழகம் ஏற்பாடு செய்திருக்கும் கண்காட்சியையும் அவர்கள் கண்டு மகிழலாம்.

காதல்ரசம் ததும்பும் பாடல்களும் அங்கே இசைக்கப்படுகிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்