Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ரக்கேன் மாநிலத்திற்கான அவசியமற்ற பயணத்தைத் தவிர்க்கவும்: வெளியுறவு அமைச்சு ஆலோசனை

மியன்மாரின் ரக்கேன் (Rakhine) மாநிலத்திற்கு அத்தியாவசியமற்ற பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு, சிங்கப்பூரர்களை வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -
ரக்கேன் மாநிலத்திற்கான அவசியமற்ற பயணத்தைத் தவிர்க்கவும்: வெளியுறவு அமைச்சு ஆலோசனை

(படம்: AFP)

மியன்மாரின் ரக்கேன் (Rakhine) மாநிலத்திற்கு அத்தியாவசியமற்ற பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு, சிங்கப்பூரர்களை வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

ரக்கேன் மாநிலத்தின் வட பகுதியில் வன்முறை நடந்தபிறகு அந்த மாநிலம் உச்ச விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இருக்கும் சிங்கப்பூரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைக் கேட்டு நடக்குமாறும் அமைச்சு வலியுறுத்தியது.

மியன்மாரில் இருக்கும் சிங்கப்பூரர்கள் முழுமையான பயணக் காப்புறுதி எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் அமைச்சு குறிப்பிட்டது.

தனது இணையப்பக்கத்தில் மின் பதிவு செய்து கொள்ளவும், அமைச்சு சிங்கப்பூரர்களை ஊக்குவிக்கிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்