Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொத்தோங் பாசிர் குடியிருப்பாளர்கள் சிலரைப் பாடுபடுத்தும் மைனாக்குருவிகள்

பொத்தோங் பாசிர் கூட்டுரிமை வீடுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் சிலர் மைனாக்குருவிகள் தங்களைப் படாத பாடு படுத்துவதாகக் கூறுகிறார்கள். 

வாசிப்புநேரம் -
பொத்தோங் பாசிர் குடியிருப்பாளர்கள் சிலரைப் பாடுபடுத்தும் மைனாக்குருவிகள்

(படம்: Koh Mui Fong/TODAY)

பொத்தோங் பாசிர் கூட்டுரிமை வீடுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் சிலர் மைனாக்குருவிகள் தங்களைப் படாத பாடு படுத்துவதாகக் கூறுகிறார்கள்.

ஜாவான் வகையைச் சேர்ந்த மைனாக்குருவிகளைச் சிங்கப்பூரில் பரவலாகக் காணலாம்.

மஞ்சள் அலகைக் கொண்ட கறுப்பு நிற மைனாக்குருவிகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அவை போடும் சத்தம் பெரும் தொந்தரவாகக் கருதப்படுகிறது.

அல்லும் பகலும் அவை கூச்சலிடுவது, வீட்டிலேயே இருக்கும் சில குடியிருப்பாளர்களுக்கு எரிச்சலை விளைவிக்கிறது.

அருகிலிருக்கும் ரயில் நிலையத்திலிருந்து பொதுமக்களுக்கான அறிவிப்பு வரும்போதும், வாகன ஓட்டுநர்கள் ஹாரன் அடிக்கும்போதும், மைனாக்குருவிகள் போடும் சத்தத்திற்கு அளவில்லை என 60 வயதுக் குடியிருப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மைனாக்குருவிகளின் தொல்லையைப் பொறுக்க முடியாமல், சில குடியிருப்பாளர்கள் புகார் செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, மரத்திலுள்ள கிளைகளை வெட்டி மைனாக்குருவிகள் கூடுகட்டி இளைப்பாறுவதைத் தடுக்க வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையமும் தேசியப் பூங்காக் கழகமும் நடவடிக்கை எடுத்துள்ளன.

மேலும், லேசர் ஒளிக்கற்றையைப் பயன்படுத்தி மைனாக்குருவிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி அவற்றைக் கலைப்பதற்கான சோதனையையும் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்