Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இணையச் சேவைக்கான MyRepublic கைத்தொலைபேசி சேவையையும் வழங்கவுள்ளது

புதிதாக அந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் 2 கைத்தொலைபேசிச் சேவைத் திட்டங்களுக்கான கட்டணங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
இணையச் சேவைக்கான MyRepublic கைத்தொலைபேசி சேவையையும் வழங்கவுள்ளது

(படம்: சேனல் நியூஸ்ஏஷியா)

சிங்கப்பூரில் இணையைச் சேவை வழங்கிவரும் MyRepublic நிறுவனம், கைத்தொலைபேசிச் சேவை வழங்கவிருக்கிறது.

புதிதாக அந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் 2 கைத்தொலைபேசிச் சேவைத் திட்டங்களுக்கான கட்டணங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒரு GigaByte திட்டமான Unoவுக்கு மாதக் கட்டணம் 8 வெள்ளி.

80 GigaByte வழங்கும் Ultimate திட்டத்துக்கு மாதக் கட்டணம் 80 வெள்ளி.

2016ஆம் ஆண்டு சிங்கப்பூரின் 4ஆவது தொலைத்தொடர்பு நிறுவனமாகத் தகுதிபெறும் முயற்சியில் MyRepublic தோல்வியுற்றது.

அந்த ஏலத்தில், ஆஸ்திரேலியாவின் TPG Telecom வெற்றிபெற்றது.

இருப்பினும், MyRepublic அதன் முயற்சியைக் கைவிடவில்லை.

இம்மாத முற்பகுதியில், StarHubஉடனான பங்காளித்துவம் குறித்து அது அறிவித்தது.

இளைய, தொழில்நுட்பத் தேர்ச்சி பெற்ற வாடிக்கையாளர்களை அது இலக்காகக் கொண்டிருக்கிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்