Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"மர்ம" பரிசுகளை விநியோகம் செய்யும் தானியக்க இயந்திரங்களுக்குத் தடை

"மர்ம" பரிசுகளை விநியோகம் செய்யும் தானியக்க இயந்திரங்கள் வாடிக்கையாளர்களிடையே பிரபலமாக இருந்தாலும் தீவு முழுவதும் உள்ள கடைத்தொகுதிகளிலிருந்து அவை மீட்டுக் கொள்ளப்படுகின்றன.

வாசிப்புநேரம் -
"மர்ம" பரிசுகளை விநியோகம் செய்யும் தானியக்க இயந்திரங்களுக்குத் தடை

(படம்: TODAY)

சிங்கப்பூர்: "மர்ம" பரிசுகளை விநியோகம் செய்யும் தானியக்க இயந்திரங்கள் வாடிக்கையாளர்களிடையே பிரபலமாக இருந்தாலும் தீவு முழுவதும் உள்ள கடைத்தொகுதிகளிலிருந்து அவை மீட்டுக் கொள்ளப்படுகின்றன.

இயந்திரத்தினுள் பணம் செலுத்தினால் போதும் "அதிர்ஷ்டத்திற்கு" ஏற்ப பரிசுப் பொருளை அது விநியோகம் செய்யும்.

திறன்பேசிகள், விலை உயர்ந்த கைப்பைகள் என பல பரிசுகைள வெல்ல வாய்ப்பு உண்டு.

இவ்வகையான தானியக்க இயந்திரங்கள் மூலம் பொது இடங்களில் அதிர்ஷ்டக் குலுக்கலை நடத்துவது சட்டவிரோதம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

அத்தகைய இயந்திரங்களை இயக்குபவர்களுக்கு ஐந்தாண்டு வரை சிறைத் தண்டனையும், 200,000 வெள்ளி வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

தற்போது சிங்கப்பூரில் "மர்ம" பரிசுகளை விநியோகம் செய்யும் தானியக்க இயந்திரங்களை நான்கு நிறுவனங்கள் நடத்தி வருகின்றன.

புக்கிட் பாஞ்சாங் பிளாஸா, நெக்ஸ், பூகிஸ் ஜங்ஷன் போன்ற கடைத்தொகுதிகளிலிருந்து அவை மீட்டுக்கொள்ளப்பட்டன.

கடந்த 6 மாதங்களாக இயந்திரங்களை இயக்கி வரும் நிறுவனங்கள், திடீரென அவற்றை மீட்டுகொள்ள வேண்டியது குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளன. அதனால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்