Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'N' Level ஏட்டுக்கல்விப் பிரிவில் உயர்நிலை 5க்குச் சுமார் 77 விழுக்காட்டினர் தகுதி

பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்க நிலைத் தேர்வு முடிவுகள், இன்று(டிசம்பர் 17) வெளியிடப்பட்டன.

வாசிப்புநேரம் -
'N' Level ஏட்டுக்கல்விப் பிரிவில் உயர்நிலை 5க்குச் சுமார் 77 விழுக்காட்டினர் தகுதி

படங்கள்: ஷரளா தேவி கோபால்

பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்க நிலைத் தேர்வு முடிவுகள், இன்று(டிசம்பர் 17) வெளியிடப்பட்டன.

ஏட்டுக்கல்வி, தொழில்நுட்பம் ஆகிய இரண்டு பிரிவுகளில் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் முடிவுகளைப் பெற்றுக்கொண்டனர்.

9,917 மாணவர்கள் வழக்க நிலைத் தேர்வின் ஏட்டுக்கல்விப் பிரிவில் தேர்வு எழுதினர். 

அவர்களில் 76.9 விழுக்காட்டினர் உயர்நிலை 5ஆம் வகுப்புக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

ஆங்கிலம், கணிதத்துடன் சிறப்பாகச் செய்த ELMAB3 எனப்படும் 3 பாடங்களையும் சேர்த்து மொத்தம் 19 புள்ளிகள் அல்லது அதற்கும் கீழான புள்ளிகளை அவர்கள் பெற்றனர்.

அதற்கான அனைத்துப் பாடங்களிலும் அவர்களது குறைந்தபட்சத் தரநிலை 5.

4,715 மாணவர்கள் வழக்க நிலைத் தேர்வின் தொழில்நுட்பப் பிரிவில் தேர்வு எழுதினர்.

அவர்களில் 97.5 விழுக்காட்டினருக்கு பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்க நிலைத் தேர்வின் தொழில்நுட்பப் பிரிவுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்