Images
  • namira catering
    (படம்: Google Maps)

கரப்பான்பூச்சிகள், எலிகள்... உணவு விநியோக நிறுவனத்தின் உரிமம் ரத்து

சிங்கப்பூர் உணவு அமைப்பு, நமீரா கேட்டரிங் எனும் உணவு விநியோக நிறுவனத்தின் உரிமத்தைத் தற்காலிகமாக ரத்து செய்திருப்பதாய்த் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தில் பல்வேறு சுகாதாரக் குறைபாடுகள் தென்பட்டதாய் அமைப்பு சொன்னது.

3015 பிடோக் நார்த் ஸ்டிரீட் 5-இல் அதன் உணவு தயாரிக்கும் இடம் உள்ளது.

அங்கு கரப்பான்பூச்சிகள், எலிகள் ஆகியவை தென்பட்டன. மேலும் ப்ளாஸ்டிக் கூடைகள், சட்டிகள், உலோகப் பானைகள் ஆகியவற்றில் உணவுக் கழிவுகள் தென்பட்டதாய் அமைப்பு தெரிவித்தது.

மாமிசத்தை குளிர்பதனப் பெட்டியிலிருந்து வெளியில் எடுத்துப் பயன்படுத்தும் நடைமுறையில் தவறு இருந்திருக்கிறது. உணவைக் கையாள்பவர்கள் பதிவு செய்யப்படாதவர்கள் என்பதும் கண்டறியப்பட்டது.

நிறுவனம் அனைத்து உணவுப் பொருள்களையும் வீசிவிடவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

உணவு தயாரிக்கும் இடத்தை முற்றிலும் சுத்தப்படுத்தி, தயாரிப்புப் பணிகளில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்யவேண்டும் என்றும் அமைப்பு எச்சரித்தது.


Top