Images
  • flight
    படம்: வினோத் கருப்பையா

நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் தயாரித்த முதல் விமானம்

நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியின் ஆகாய-விண்வெளித் துறை மாணவர்கள் 34 பேர் சேர்ந்து முதன் முறை ஒரு விமானத்தைத் தயாரித்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டு விமானத்தை உருவாக்கும் பணிகளை மாணவர்கள் தொடங்கினர்.

6.7 மீட்டர் நீளமும், 8 அடி உயரமும் கொண்ட அந்த விமானம்,
மணிக்கு 125 வேகத்தில் பறக்கும் ஆற்றலைக் கொண்டது.

விமானத்தில் 24 கேலன் எரிவாயு நிரப்பிக் கொள்ளும் வசதியும் உண்டு.

அதன்மூலம் சுமார் 700 கிலோமீட்டர் தூரம் வரை (சிங்கப்பூரில் இருந்து கோலாலம்பூர்) சென்று வரலாம்.

விமானத்தில் விமானியுடன் சேர்ந்து இன்னொருவரும் பயணம் செய்யலாம்.


விமான இருக்கைகளுக்கு பின்னால் பயணப் பெட்டிகளையும், தேவையான பொருள்களையும் வைத்துக் கொள்ளும் வசதிகளும் விமானத்தில் உள்ளது. 

Top