Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இளையர்களுக்குப் பிற்பகல் நேரச் சிறு தூக்கம் அவர்களின் கற்றல், ஞாபக சக்தியை அதிகரிக்கிறது: NUS ஆய்வு

இளையர்கள், பிற்பகல் நேரத்தில் சற்று நேரம் தூங்குவதை வழக்கமாகக் கொண்டால், அது அவர்களின் கற்றலையும் நினைவாற்றலையும் அதிகரிப்பதாக தேசியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
இளையர்களுக்குப் பிற்பகல் நேரச் சிறு தூக்கம் அவர்களின் கற்றல், ஞாபக சக்தியை அதிகரிக்கிறது: NUS ஆய்வு

(கோப்புப் படம்: CNA)

இளையர்கள், பிற்பகல் நேரத்தில் சற்று நேரம் தூங்குவதை வழக்கமாகக் கொண்டால், அது அவர்களின் கற்றலையும் நினைவாற்றலையும் அதிகரிப்பதாக தேசியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

15 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட பதின்ம வயதினரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சிறு-தூக்கம், அதிகப் பயனளிப்பதாகத் தெரியவந்தது.

24-மணி நேரத்தில் அவர்கள் எவ்வளவு நேரம் தூங்கினாலும், பகலில் தூங்கும் சிறு தூக்கம் அதிகப் பயன்மிக்கதாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இரண்டு வாரக் காலக்கட்டத்தில், இரவில் குறைவான அளவுத் தூக்கமும் பிற்பகல் நேரத்தில் சிறு தூக்கமும், இளையர்களின் நினைவாற்றலில் குறிப்பிடத்தக்க பலன்களைத் தந்ததாகப் பல்கலைக்கழகம் தெரிவித்தது.

பெரும்பாலும் இயல்பான இரவுநேரத் தூக்கத்திற்கு ஒரு துணையாகக் கருதப்படும் சிறு தூக்கம், அன்றாடத் தூக்க முறையில் ஓர் அங்கமாக ஆய்வு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பதின்ம வயதினர் பலர், போதுமான அளவு தூங்குவதில்லை என்பதால், 24 மணிநேரத்தில் விட்டு விட்டுத் தூங்குவது அவர்களின் கற்றலை பாதிக்குமா என்பதை அறிய, அய்வு மேற்கொள்ளப்பட்டது.

112 பேர், நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, 15 நாள்களுக்கு அந்த ஆய்வு நடத்தப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்