Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Nas Daily-இன் ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பூமலையில் அனுமதி

ஒரு நிமிட பயணக் காணொளிகளுக்குப் பிரபலமான வலைப்பதிவாளர் Nas Daily, நாளை பூமலையில் ரசிகர் சந்திப்பு நடத்துவது தொடர்பில் அனுமதி கிடைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

ஒரு நிமிட பயணக் காணொளிகளுக்குப் பிரபலமான வலைப்பதிவாளர் Nas Daily, நாளை பூமலையில் ரசிகர் சந்திப்பு நடத்துவது தொடர்பில் அனுமதி கிடைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலியரான அவரது இயற்பெயர் நஸீர் யாசின்.

நாளைய நிகழ்ச்சிக்குத் தேவையான அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டதை CNAவுடனான தொலைபேசிப் பேட்டியில் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சி சுமுகமாக நடைபெறுவதன் தொடர்பில், காவல்துறையுடனும், பூமலை அதிகாரிகளுடனும் இணைந்து பணியாற்றுவதாக Nas Daily கூறினார்.

சிங்கப்பூரில் அனைத்தும் முறையாக ஏற்பாடு செய்யப்படுவதால் தாம் இங்கு நிகழ்ச்சி நடத்த முடிவெடுத்ததாய் அவர் குறிப்பிட்டார்.

ஏற்பாட்டுப் பணிகள் விரைவாகவும், சரியான நேரத்தில் முறையுடனும் இடம்பெற்றிருப்பதாக அவர் கூறினார்.

வானிலை ஆய்வகம் நாளை பிற்பகலில் மழை பெய்யலாம் என்று முன்னுரைத்துள்ளது. அது ஒரு பிரச்சினை அல்ல என்கிறது ஏற்பாட்டுக் குழு.

மூவாயிரத்துக்கும் அதிகமானோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சியின் காணொளியை அடுத்த வாரம் வெளியிடவிருப்பதாக Nas Daily கூறியுள்ளார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்