Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உலகப் போர், ஜப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்தில் வாழ்க்கை எப்படி இருந்தது? திரைப்படங்களுடன் சிறப்புக் கலந்துரையாடல்

உலகப் போர், ஜப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்தில் வாழ்க்கை எப்படி இருந்தது? திரைப்படங்களுடன் சிறப்புக் கலந்துரையாடல்

வாசிப்புநேரம் -
உலகப் போர், ஜப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்தில் வாழ்க்கை எப்படி இருந்தது? திரைப்படங்களுடன் சிறப்புக் கலந்துரையாடல்

படம்: Nation Archives of Singapore

இரண்டாம் உலகப் போர், ஜப்பானிய ஆக்கிரமிப்பு போன்ற கடந்தகால நிகழ்வுகளின்போது மக்களின் வாழ்க்கை பற்றிய திரைப்படங்களை, ஆசியத் திரைப்படக் காப்பகம் உலகம் முழுவதில் இருந்தும் திரட்டி வருகிறது.

2018ஆம் ஆண்டு, அத்தகைய திரைப்படங்கள் சிலவற்றை, அது தேசிய நூலக வாரியத்தில் திரையிட்டது.

அதற்குப் பார்வையாளர்களிடையே, நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனைத் தழுவிய சிறப்புக் கலந்துரையாடலை Zoom வழி தேசிய ஆவணக் காப்பகம், வரும் வியாழக்கிழமை நடத்தவிருக்கிறது.

மூவாண்டுக்கு முன்னர் திரையிடப்பட்ட படங்களில், 13 முழு நீளத் திரைப்படங்களும், 4 குறும்படங்களும் அடங்கும்.

அதில் "ஜானகி" எனும் தலைப்பில், உள்ளூர் இயக்குநர் டான் அரவிந் படைப்பில் தமிழ்க் குறும்படமும் இடம்பெற்றது.

கலந்துரையாடல்பற்றி மேல் விவரம் தருகிறார், ஆசியத் திரைப்படக் காப்பகத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், விக்னேஷ் கோபிநாதன்.

ஜானகி படத்தில் வரும் கதை யாருக்கும் அவ்வளவாகத் தெரியாதது. அதில் ராணி லட்சுமி பாய் படையினர் சிங்கப்பூரிலும் ராணுவப் பயிற்சியை மேற்கொண்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

"Spirit Of The Overseas Chinese" என்ற படம், 1946 ஆம் ஆண்டு வெளியானது. அது மிகவும் அரிதான படம். அதை ஒரு சிங்கப்பூர்ப் பெண் இயக்கினார்.

அந்த படம் தொலைந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, 2017ஆம் ஆண்டு சீனாவின் திரைப்படக் காப்பகத்தில் அதைக் கண்டுபிடித்தோம்.

அதன் பிறகு அதை மின்னிலக்க வடிவத்துக்கு மாற்றினோம்.

அந்த நடவடிக்கை, பலராலும் போற்றப்பட்டது 

மாறுபட்ட கண்ணோட்டத்தில் வரலாற்றைப் பார்க்க, இத்தகைய திரைப்படங்கள் உதவுகின்றன.

அந்தப் படங்கள் பற்றிய சிறப்புக் கலந்துரையாடலில் கலந்துகொள்ள இணையம் வழி பதிவுசெய்துகொள்ளலம்.

இணையப்பக்க முகவரி - go.gov.sg/nas-25feb 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்