Images
  • national anthem (1)

புதுப்பொலிவுடன் சிங்கப்பூரின் தேசிய கீதம்

சிங்கப்பூரின் தேசிய கீதம் அறிமுகம் கண்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு, மறுபதிவு செய்யப்பட்டுப் புதுப்பொலிவுடன் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

முதன்முறை தேசிய கீதம் ஒலிபரப்பாகிய அதே இடத்திலிருந்து இன்று மறுபதிவான தேசிய கீதம் ஒலிபரப்பானது.

இதற்கு முன் 2000இல் அதிகாரபூர்வ மாற்றம் கண்ட தேசிய கீதத்தின் மறுபதிவு, மேம்பட்ட ஒலிப்பதிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

தேசியக் காட்சியகத்தின் வெளியே உள்ள படிகளில் தேசிய கீதம் ஒலிபரப்பானது.
   


அதே இடத்தில் 60 ஆண்டுகளுக்கு முன், சிங்கப்பூரின் முதல் அதிபர் திரு. யூசுஃப் இஸ்ஹாக் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட தினத்தில் சிங்கப்பூரின் தேசிய அடையாளங்கள் அறிமுகம் கண்டன.

Top