Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேசிய கீதத்தை எங்குப் பாடலாம்.. எப்படி ஒலிபரப்பலாம்?

சிங்கப்பூர் தேசிய கீதத்தின் மறுபதிவு இன்று ஒலிபரப்பப்பட்டது. அதனைப் பொதுமக்கள் பாடுவதற்கும் பயன்படுத்துவதற்கும் சில வழிமுறைகள் உண்டு.

வாசிப்புநேரம் -
தேசிய கீதத்தை எங்குப் பாடலாம்.. எப்படி ஒலிபரப்பலாம்?

(படம்: Unsplash/chuttersnap)

சிங்கப்பூர் தேசிய கீதத்தின் மறுபதிவு இன்று ஒலிபரப்பப்பட்டது.
அதனைப் பொதுமக்கள் பாடுவதற்கும் பயன்படுத்துவதற்கும் சில வழிமுறைகள் உண்டு.

எப்போது ஒலிபரப்பலாம்?

பொது அமைப்புகள் மட்டுமின்றித் தனியார் அமைப்புகளும் தேசிய கீதத்தை ஒலிபரப்பலாம்; பாடலாம்.

தேசிய அளவிலான கொண்டாட்டங்கள் அல்லது தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற நிகழ்வுகளில் தேசிய கீதத்தை ஒலிபரப்பலாம், அதைப் பாடலாம்.

தேசிய கீதத்தை எப்படி ஒலிபரப்பலாம்?

மெல்லிசை வடிவிலோ, பாடல் வரிகளுடனோ தேசிய கீதத்தை ஒலிபரப்ப முடியும்.

முடிந்த அளவில் தேசிய கீதம் முழுமையாக ஒலிபரப்பப்படவேண்டும். நேர அவகாசம் போதாமல் இருந்தால் கலாசார, சமூக இளையர் துறை வெளியிட்டுள்ள குறுகிய வடிவத்தைப் பயன்படுத்தலாம்.

தேசிய கீதம் மற்ற வகையில் இசையமைக்கப்பட்டால், அதன் மெட்டும் வரிகளும் முழுமையாக இருக்கவேண்டும்; அதன் கண்ணியம் கட்டிக்காக்கப்படவேண்டும்.

தேசிய கீதம் ஒலிபரப்பப்படும்போதோ, பாடப்படும்போதோ மரியாதை செலுத்தும் வகையில் அனைவரும் எழுந்து நிற்கவேண்டும்.

தேசிய கீதத்தை எப்படிப் பயன்படுத்தக்கூடாது?

மற்ற இசையமைப்புகளுடன் தேசிய கீதம் இணைக்கப்படக்கூடாது.

ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழிகளில் இயற்றப்பட்ட வரிகளுடன் மட்டுமே தேசிய கீதத்தைப் பாடமுடியும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்