Images
  • marina bay floating platform
    (படம்: நகரச் சீரமைப்பு ஆணையம்)

தேசிய அணிவகுப்பு 2020, 2021 மரினா பே மிதக்கும் மேடையில் நடைபெறும்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

அடுத்த இரண்டு தேசிய அணிவகுப்புகளும் மரினா பே மிதக்கும் மேடையில் நடைபெறும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்துள்ளார்.

மரினா பே மிதக்கும் மேடை NS Square எனப் பெயர் மாறவிருக்கிறது. அதன் தொடர்பில் சீரமைப்புப் பணிகள் நடைபெறவிருக்கின்றன. அதற்கு முன்னதாக அடுத்த இரண்டு தேசிய தின அணிவகுப்புகள் அங்கு நடைபெறும் என்றார் அவர்.

நிலத்தில் இடம்பெறும் சாகசங்களோடு ஆகாய, கடல் அங்கங்களையும் மிதக்கும் மேடையில் எளிதாகச் செயல்படுத்த முடியும் என்று டாக்டர் இங் கூறினார்.


Top