Images
  • singapore runner
    படம்: Facebook@SohRuiYong

நெடுந்தொலைவோட்டத்தில் புதிய தேசியச் சாதனை

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூரின் ஆண்கள் பிரிவு நெடுந்தொலைவோட்டத்தில் புதிய தேசியச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஓட்டப்பந்தய வீரர் சோ ரூய் யோங் 2 மணி நேரம் 23 நிமிடம் 42 விநாடி என்ற நேரத்தில், 42.2 கிலோமீட்டர் தொலைவை ஓடிக் கடந்து  அந்தச் சாதனையைப் புரிந்துள்ளார்.

சோலில் நடைபெற்ற நெடுந்தொலைவோட்டத்தில் அந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது.

அதற்கு முன்னர் அந்த தேசியச் சாதனையை முருகையா ரமேஷோன் வைத்திருந்தார்.

1995ஆம் ஆண்டு சியாங் மாயில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் அவர் 2 மணி நேரம் 24 நிமிடம் 22 விநாடி என்ற நேரத்தில் வந்தார்.


Top