Images
  • national monument
    (படம்: Savills)

தேசிய நினைவுச்சின்னமான House of Tan Yeok Nee விற்பனைக்கு

தேசிய நினைவுச்சின்னமான House of Tan Yeok Nee விற்பனைக்கு வந்துள்ளது.

இஸ்தானவிற்கு அருகில் உள்ள அந்தக் கட்டடத்தின் விலை 92 மில்லியன் வெள்ளி.

சுமார் 58,480 சதுர அடிப் பரப்பளவு கொண்டது அந்த இடம்.

ஒரு சதுர அடியின் விலை சுமார் 1,573 வெள்ளி என்று அந்த இடத்தை விற்பனைக்கு விடும் சொத்து முகவர் நிறுவனமான Savills Singapore இன்று தகவல் வெளியிட்டது.

House of Tan Yeok Nee 1882ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

இடத்தை விலைக்கு வாங்க விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

House of Tan Yeok Nee வளாகத்தையும் சேர்த்து சிங்கப்பூரில் 73 தேசிய நினைவுச்சின்னங்கள் உள்ளன.

- CNA/ad(gs)

Top