Images

கண்காட்சிப் பொருட்களோடு நேரடியாக உரையாட ஒரு வாய்ப்பு

தேசிய அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களைப் பார்த்து ரசிப்பது மட்டுமில்லாமல் அவற்றோடு உரையாடியும் மகிழலாம். 

சிங்கப்பூரின் வளர்ச்சியை வருணிக்கும் 4 காட்சியகங்களில், பொருட்கள் பார்வையாளருடன் உரையாடும் நவீன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சாதாரணப் பொருட்கள் பார்வையாளர்கள் வந்ததும் உயிர் பெறுகின்றன.

தேசிய விளையாட்டரங்கில் இருந்த நாற்காலி, பழைய விளையாட்டுப் பொருள் போன்றவை தொடர்பான காட்சிகள் அவற்றுள் சில.


தேசிய அரும்பொருளகத்தின் 131ஆம் ஆண்டு நிறைவையொட்டி இன்றும் (அக்டோபர் 13) நாளையும் சிறப்பு  நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பிள்ளைகளுக்கான விளையாட்டு நடவடிக்கைகள், கதை சொல்லுதல், குடும்பத்தோடு சேர்ந்து அரும்பொருளகத்தைச் சுற்றிப் பார்ப்பது எனப் பல அங்கங்கள் உண்டு.


அரும்பொருளகத்தில் நிரந்தரமாக உள்ள இயற்கை வரலாற்றுக் காட்சியகமும் புதுப் பொலிவு பெற்றுள்ளது.


அதற்காக பிரபல சிங்கப்பூர் சமையல் வல்லுநர் ஜேனிஸ் வோங் (Janice Wong) சிறப்பு சாக்லெட்டுகளைத் தயாரித்துள்ளார்.

லக்சா, மிளகாய், மல்லிகை போன்ற வித்தியாசமான சுவையிலும் மணத்திலும் அவை உருவாக்கப்பட்டுள்ளன.

தேசிய அரும்பொருளகக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி இலவசம். 


Top