Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புதிதாக ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ள தேசிய கீதம் நாளை முற்பகல் 11.20க்கு ஒலிபரப்பு

சிங்கப்பூரின் வானொலி நிலையங்கள் புதிதாக ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ள தேசிய கீதத்தை நாளை முற்பகல் 11.20க்கு ஒலிபரப்பவிருக்கின்றன.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் வானொலி நிலையங்கள் புதிதாக ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ள தேசிய கீதத்தை நாளை முற்பகல் 11.20க்கு ஒலிபரப்பவிருக்கின்றன.

மீடியாகார்ப், Singapore Press Holdings, SAFRA ஆகியவற்றின் அனைத்து வானொலி நிலையங்களிலும் அது ஒலிபரப்பப்படும்.

நாட்டின் தேசிய கீதம், கொடி, சின்னம் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்ட 60ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக அது அமையவிருக்கிறது.

முன்னேறட்டும் சிங்கப்பூர் எனும் பொருள்படும் மாஜூலா சிங்கப்பூரா பாடல், 1958ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கான அதிகாரபூர்வ பாடலாகப் பதிவுசெய்யப்பட்டது.

மறைந்த உள்ளூர் இசையமைப்பாளர் ஸுபிர் சயிட் (Zubir Said) அதனைத் தொகுத்திருந்தார்.

பின்னர் 1959ஆம் ஆண்டு சிங்கப்பூர் தன்னாட்சி நிலையைப் பெற்றதும், அப்போதைய துணைப் பிரதமர் டோ சின் சாய் (Toh Chin Chye), அந்தப் பாடல் அனைத்து இனங்களுக்கும் பொருத்தமாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

அதே ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் தேதி அது சிங்கப்பூரின் தேசிய கீதமாக அறிமுகம் செய்யப்பட்டது. தேசியக் கொடி, சின்னம் ஆகியவையும் அப்போது வெளியிடப்பட்டன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்