Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

National Times Singapore Facebook பக்கம் எந்த வகையிலும் லாபம் ஈட்டத் தடை

The National Times Singapore எனும் Facebook பக்கம் எந்த வகையிலும் லாபம் ஈட்ட POFMA என்ற பொய்த் தகவலுக்கு எதிரான சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
National Times Singapore Facebook பக்கம் எந்த வகையிலும் லாபம் ஈட்டத் தடை

(படம்: CNA)

The National Times Singapore எனும் Facebook பக்கம் எந்த வகையிலும் லாபம் ஈட்ட POFMA என்ற பொய்த் தகவலுக்கு எதிரான சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அது இன்று முதல் நடப்புக்கு வருகிறது.

திரு. அலெக்ஸ் டானின் நிர்வாகத்தில் செயல்படும் அந்தப் பக்கத்தில், இம்மாதம் 15-ஆம் தேதி வெளியிடப்பட்ட பதிவில், குறைந்தது மூன்று பொய்த் தகவல்கள் இருந்ததாகத் தொடர்பு, தகவல் அமைச்சு கூறியது.

POFMA சட்டத்தின் கீழ், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொய்த் தகவல்களைக் கொண்ட இணையத் தளங்கள் லாபம் ஈட்டத் தடை விதிக்கப்படலாம்.

அத்துடன், இணையத் தளம் மூலம் பொய்த் தகவலை வெளியிட, எந்தவொரு நிதி ஆதரவுக்கும் தடை விதிக்கப்படும்.

அந்தப் பக்கம், தடைக்கான தகுந்த அறிவிப்பைக் கொண்டிருக்கவேண்டும்.

Facebook பக்கத்திற்குச் செல்லும் இணையவாசிகள், அதில் பொய்த் தகவல்கள் இடம்பெறுவதாக எச்சரிக்கப்படுவர்.

இதற்கு முன், திரு. டான் நிர்வகிக்கும் மற்ற பக்கங்களுக்கு, பொய்த் தகவலைத் திருத்துவதற்கான ஆணையைப் பிறப்பிக்கும்படி POFMA அலுவலகத்திற்கு 6 முறை உத்தரவிடப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்