Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆள்குறைப்பு நடவடிக்கைகளைத் தவிர்க்க, நிறுவனங்கள் தற்காலிகமாகச் சம்பளங்களைக் குறைக்கலாம்: தேசிய சம்பள மன்றம்

செலவுகளைக் குறைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ள நிறுவனங்கள், ஆள்குறைப்பு முயற்சிகளைத் தடுக்க தற்காலிகமாகச் சம்பளம் குறைப்பது பற்றிப் பரிசீலிக்கலாம் என்று தேசியச் சம்பள மன்றம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

செலவுகளைக் குறைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ள நிறுவனங்கள், ஆள்குறைப்பு முயற்சிகளைத் தடுக்க தற்காலிகமாகச் சம்பளம் குறைப்பது பற்றிப் பரிசீலிக்கலாம் என்று தேசியச் சம்பள மன்றம் தெரிவித்துள்ளது.

இதுவரை நிறுவனங்கள், செயல்பட்ட விதம், அவற்றின் எதிர்காலம் போன்றவற்றைக் கருத்தில் கொள்வதுடன் துறையையும் பொருத்து சம்பளங்கள் குறைக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டது.

சம்பளக் குறைப்பு, குறிப்பிட்ட எந்தப் பிரிவினருக்கும் சுமையாக அமைந்து விடக்கூடாது என்று அது நினைவூட்டியது.

நிறுவனத்தின் நிர்வாகம் சம்பளக் குறைப்புக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்றது மன்றம்.

நிறுவனம் வழக்கநிலைக்குத் திரும்பிய பின்னர் சம்பளங்கள் மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

அடுத்த மாதத்திலிருந்து அடுத்த ஆண்டு ஜூன் வரை புதிய வழிகாட்டி நடப்பிலிருக்கும்.

நீக்குப்போக்கான சம்பளக் கட்டமைப்பின்படி, சம்பளத்தின் சில பகுதிகளை மட்டுமே குறைப்பதில் நீக்குப்போக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

1,400 வெள்ளி அல்லது அதற்கும்கீழ் குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தைக் குறைக்காமல் அப்படியே தொடரலாம் என்று ஆலோசனை கூறப்பட்டது.

மன்றம் பரிந்துரைத்துள்ள புதிய வழிகாட்டியை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாய் தெரிவித்துள்ளது மனிதவள அமைச்சு. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்