Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குடியிருப்பு வட்டாரங்களில் இடம்பெற உள்ள தேசிய தின வாணவேடிக்கை: எப்படி ஏற்பாடு செய்யப்பட்டது?

சிங்கப்பூரின் தேசிய தினக் கொண்டாட்டங்களில் பெரும்பாலானோர் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் ஓர் அங்கம் என்றால் அது வாணவேடிக்கைதான்.

வாசிப்புநேரம் -
குடியிருப்பு வட்டாரங்களில் இடம்பெற உள்ள தேசிய தின வாணவேடிக்கை: எப்படி ஏற்பாடு செய்யப்பட்டது?

(படம்: Pixabay)

சிங்கப்பூரின் தேசிய தினக் கொண்டாட்டங்களில் பெரும்பாலானோர் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் ஓர் அங்கம் என்றால் அது வாணவேடிக்கைதான்.

வானத்தில் வண்ணத்தை வாரியிறைக்கும் வாணங்கள், பார்ப்போர் மனங்களை மகிழ்ச்சியால் நிறைக்கும்.

வண்ணமயமான வாணங்கள் உருவாக்கும் விதவிதமான வடிவங்கள், பெரியவர்களையும் குழந்தைகளைப்போல் குதூகலிக்கச் செய்யும்.

இந்த ஆண்டு, COVID-19 தொடர்பான கட்டுப்பாடுகளால் அது மக்களுக்கு மிக அருகே கொண்டுவரப்பட்டுள்ளது.

செம்பவாங், தெம்பனிஸ் உள்ளிட்ட 10 குடியிருப்பு வட்டாரங்களில் வாணவேடிக்கை இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் அதேநேரத்தில், அவர்களுக்கு அது பாதுகாப்பான அனுபவமாகவும் அமைய, என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

போதுமான பாதுகாப்பு இடைவெளி

எவ்வளவு வாணங்கள் வெடிக்கப்படுகின்றன, எவ்வளவு உயரத்திற்கு அவை வெடிக்கப்படுகின்றன என்பனவற்றைக் கணக்கில் கொண்டு, வாணவேடிக்கை ஏவப்படும் இடத்திலிருந்து 400 மீட்டர் சுற்றளவுவரை பாதுகாப்பு இடைவெளி ஒதுக்கப்பட்டுள்ளதாக வாணவேடிக்கைப் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

அது, வாணங்களின் உள்ளே இருக்கும் வெடிமருந்து வெடித்தபிறகு கீழே விழக்கூடிய குப்பைகள், மக்கள் மேல் விழாமல் இருக்க உதவும்.

மின்னல் தாக்குதலால் உருவாகும் அபாயத்தைத் தவிர்க்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எவ்வளவு உயரத்திற்கு வெடிக்கப்படும்?

சுமார் 15 முதல் 62 மாடி உயரம்வரை வாணங்கள் வெடிக்கப்படும்.

அவற்றை 8 கிலோமீட்டர் தொலைவிலிருந்து கூடக் கண்டு களிக்கலாம்.

குறிப்பிட்ட 10 இடங்கள் எப்படித் தெரிவு செய்யப்பட்டன?

வாணவேடிக்கைக்கெனத் தெரிவு செய்யப்பட்டுள்ள 10 இடங்களிலிருந்தும் ஆக அதிகமானோர் வாணவேடிக்கையைக் காண முடியும் என்பதால் அவை தேர்ந்து எடுக்கப்பட்டன.

நிலப்பரப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றை ஆராய்ந்த பின்னரே, அவை தெரிவு செய்யப்பட்டதாக தேசிய தின வாணவேடிக்கை அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

இயற்கை வனப்பகுதி, வனவிலங்குகளின் நடமாட்டமுள்ள பகுதிகள், ஆகாயப் போக்குவரத்துவெளி ஆகியவற்றுக்கு அருகிலுள்ள இடங்கள் தவிர்க்கப்பட்டதாக அவர் கூறினார்.

மேலும், நல்ல அனுபவமுள்ள நிறுவனங்களிடமிருந்து வாணங்கள் வாங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அதிகாரிகள்

தேசிய தினத்தன்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 2,000 அதிகாரிகள் பணியமர்த்தப்படுவர்.

வாணவேடிக்கையைக் காணப் பல்லாயிரம்பேர் வழக்கமாகத் திரளும் மரீனா பே வட்டாரத்தில் மட்டும் ஏறத்தாழ 300 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்