Images
  • NDR Listening Point
    (படம்: www.reach.gov.sg) 

தேசிய தினக் கூட்ட உரை குறித்து பல்வேறு வழிகளில் கருத்துத் தெரிவிக்கலாம்

பிரதமரின் இந்த ஆண்டுக்கான தேசிய தினக் கூட்ட உரை குறித்து, சிங்கப்பூரர்கள் பல்வேறு வழிகளில் கருத்துத் தெரிவிக்கலாம்.

நேரடிப் பொதுக் கலந்துரையாடல்கள், தீவு முழுவதும் அமைக்கப்படவிருக்கும் Listening Points எனப்படும் கருத்தறியும் கூடாரங்கள், Whatsapp குழுக்கள், சமூக ஊடகங்கள் வழி கருத்து தெரிவிக்கும் முறை ஆகியவை அவற்றில் அடங்கும்.

அத்துடன், அரசாங்கத்தின் கருத்தறியும் பிரிவான REACH, “virtual Listening Point” எனப்படும் புத்தாக்க வழிமுறையை இவ்வாண்டு அறிமுகம் செய்கிறது.

REACH இணையத் தளத்தில், செயற்கை அறிவாற்றல் தொழில்நுட்பத்தின் மூலம் வழங்கப்படும் மெய்நிகர் கலந்துரையாடல் அங்கம் அது.

REACHஇன் ஃபேஸ்புக் பக்கத்திலும் அது இடம்பெறும்.

மேலும், Twitter மூலமாகவும், மின்னஞ்சல், குறுஞ்செய்தி ஆகியவற்றின் வாயிலாகவும், பிரதமரின் தேசிய தினக் கூட்ட உரை குறித்த பொதுமக்களின் கருத்துகளை REACH திரட்டுகிறது.
 

Top