Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அதிரடித்திட்டத்தின் போது ஈரச் சந்தைகளில் கூட்டம் குறைந்தது : தேசிய சுற்றுப்புற அமைப்பு

கிருமிப் பரவலுக்கு எதிரான அதிரடித்திட்டம் நடப்புக்கு வந்ததில் இருந்து, ஈரச் சந்தைகளில் கூட்டம் குறையத் தொடங்கியுள்ளதாக, தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

கிருமிப் பரவலுக்கு எதிரான அதிரடித்திட்டம் நடப்புக்கு வந்ததில் இருந்து, ஈரச் சந்தைகளில் கூட்டம் குறையத் தொடங்கியுள்ளதாக, தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ஒற்றைப் படை, இரட்டைப் படைத் தேதிகளில் வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் நான்கு பிரபலமான ஈரச் சந்தைகளின் உள்ளும் புறமும் நெரிசல் குறைந்துள்ளது.

அதிரடித் திட்டத்தைக் கட்டங்கட்டமாகத் தளர்த்தும் முயற்சியின் ஒருபகுதியாக, குறிப்பிட்ட அந்த நான்கு ஈரச் சந்தைகளிலும் நுழைவு அனுமதிக்கான தற்போதைய விதிமுறைகள் தொடரும்.

உணவங்காடிக் கடைக்காரர்களின் நடப்புச் செலவைக் குறைக்கும் வகையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்வரை அவர்களுக்கு வாடகை தள்ளுபடி செய்யப்படுகிறது என்று அமைப்பு சுட்டியது.

மொத்தமாக அவர்களுக்கு, ஐந்து மாத வாடகைத் தள்ளுபடி கிடைக்கிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்