Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் டெங்கி காய்ச்சலால் ஆடவர் மரணம்

ஹோகாங் வட்டாரத்தில் வசித்த 77 வயது ஆடவர் டெங்கி காய்ச்சலால் கடந்த வியாழக்கிழமை மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் டெங்கி காய்ச்சலால் ஆடவர் மரணம்

(படம்: Monica Kotwani)

ஹோகாங் வட்டாரத்தில் வசித்த 77 வயது ஆடவர் டெங்கி காய்ச்சலால் கடந்த வியாழக்கிழமை மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சும் தேசியச் சுற்றுப்புற அமைப்பும் அந்தத் தகவலை வெளியிட்டன.

கடந்த 3ஆம் தேதி மற்றோர் ஆடவர் டெங்கி காய்ச்சலால் மாண்டனர்.

அந்த 74 வயது ஆடவர் பிடோக் ரெசர்வார் ரோட்டில் வசித்து வந்தார்.

இந்த ஆண்டில் இதுவரை டெங்கிக் காய்ச்சலால் ஏற்பட்டுள்ள இரண்டு மரணச் சம்பவங்கள் அவை எனத் தெரிவிக்கப்பட்டது.

டெங்கி தொற்றில் இருந்து பலர் குணமடைந்தாலும், ஒருசிலருக்குச் சிக்கல்கள் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

அது பெரும்பாலும், முதியோரையும் ஒரே நேரத்தில் பல நோய்களைக் கொண்டவர்களையும் எளிதில் பாதிக்கலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்