Images
  • cigarette
    (படம்:  TODAY)

சிகரெட் துண்டை வீசியெறிவதைப் பார்த்த அதிகாரியின் கழுத்தை நெறித்த ஆடவர்

சிகரெட் புகைத்து விட்டு அதன் துண்டைக் கீழே வீசியெறிந்த ஆடவர், அந்தச் சம்பவத்தை விசாரிக்க வந்த அதிகாரியைத் தாக்கிய குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

அதிகாரி தேசியச் சுற்றுப்புற அமைப்பின் துணைக் காவல் அதிகாரி.

சம்பவம் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேலாங் பகுதியில் நடந்தது.

கப்பகுண்ட்டுல ஸ்ரீகாந்த் என்னும் 42 வயது நிரந்தரவாசி, சிகரெட் புகைத்து விட்டு அதன் துண்டைக் குப்பைத் தொட்டியில் போடாமல் அருகில் இருந்த கால்வாயில் வீசியுள்ளார்.

அதனைக் கண்ட அதிகாரி, ஸ்ரீகாந்த் குப்பை போட்டதாகக் கூறி அவரது விவரங்களைக் கேட்டுள்ளார், அதற்கு பதில்தராத ஆடவர் அதிகாரியைப் புறக்கணித்து அங்கிருந்து வெளியேற முயன்றார்.

எச்சரித்த பின்னும் அவர் நிற்காததால், அவர் போகவிடாதபடி அதிகாரி கையைக் காட்டி நிறுத்தினார்.

அதனால் சினமுற்ற ஸ்ரீகாந்த், அதிகாரியின் கழுத்தை நெரித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, அந்த ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்றது.

ஸ்ரீகாந்திற்கு நவம்பர் மாதம் 4ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும். தற்போது அவர் 5,000 வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்க அதிகாரியைத் தாக்கிய குற்றத்துக்கு, 7 வருடங்கள் வரையிலான சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி விதிக்கப்படலாம்.


 

Top