Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் பிற்பகலில் மழை

சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் பிற்பகலில் மிதமான அளவிலிருந்து கடுமையான அளவு வரை மழை பெய்யக்கூடும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு முன்னுரைத்தது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் பிற்பகலில் மழை

(படம்: Channel NewsAsia)

சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் பிற்பகலில் மிதமான அளவிலிருந்து கடுமையான அளவு வரை மழை பெய்யக்கூடும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு முன்னுரைத்தது.

பிற்பகல் 3 மணி வரை பலத்த காற்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைப்பு குறிப்பிட்டது.

கனத்த மழை காரணமாகத் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாகப் பொதுப் பயனீட்டுக் கழகம் வேறோர் அறிக்கையில் தெரிவித்தது.

ஸ்டீவன்ஸ் சாலை (Stevens Road) முதல் பால்மோரல் சாலை (Balmoral Road) வரை திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக பிற்பகல் 1.24 மணிக்கு கழகம் அதன் Twitter பதிவில் குறிப்பிட்டிருந்தது.

அதே மாதிரி, கில்ஸ்டேட் சாலை, டன்னர்ன் சாலைகளின் சந்திப்பிலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது என்றூ சுமார் பிற்பகல் 1.55 மணி அளவில் அது பதிவு செய்தது.

அந்தப் பகுதிகளைத் தவிர்க்குமாறு வாகனமோட்டிகளுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

இரண்டு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளங்கள் தணிந்துள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்