Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் காற்றின் தரம் 'பாதுகாப்பான அளவில்' உள்ளது - தேசியச் சுற்றுப்புற அமைப்பு

சிங்கப்பூரின் கரையோரத்தில் காற்றின் தரம் 'பாதுகாப்பான அளவில்' உள்ளதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்திருக்கிறது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் கரையோரத்தில் காற்றின் தரம் 'பாதுகாப்பான அளவில்' உள்ளதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்திருக்கிறது.

கடந்த வாரம் ஜொகூரின் பாசிர் கூடாங்கில் உள்ள ஆற்றில் நச்சுக் கழிவுப்பொருள்கள் வீசப்பட்டதால் நூற்றுக்கணக்கானோர் பாதிப்படைந்தனர்.

சம்பவம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தேசியச் சுற்றுப்புற அமைப்பு தனது காற்றுத்தரக் கண்காணிப்பு நிலையங்களில் நச்சுத் துகள் ஏதும் கண்டறியப்படவில்லை என்று கூறியது.

தற்போது பாசிர் கூடாங்கில் உள்ள நிலவரத்தைக் கண்காணித்து வருவதாகவும் அமைப்பு தெரிவித்தது.

இரசாயனக் கழிவுப் பொருள்களால் பாதிக்கப்பட்ட சுங்கை கிம் கிம் (Sungai Kim Kim) ஆறு சிங்கப்பூரின் புலாவ் உபின் அருகே ஜொகூர் நீரிணையில் கலக்கிறது.

இதுவரை 506 பேர் இரசாயனக் கழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 166 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்