Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குடியிருப்பாளர்கள் தங்களுக்கு எது முக்கியமோ அதைத் தேர்ந்தெடுப்பார்கள்: அமைச்சர் சண்முகம்

சிங்கப்பூரர்களிடையே இரண்டு முக்கிய அக்கறைகள் இருப்பதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார். COVID-19 சுகாதார நெருக்கடி, பொருளியலை அது எவ்வாறு பாதித்துள்ளது ஆகியவை அவை.

வாசிப்புநேரம் -
குடியிருப்பாளர்கள் தங்களுக்கு எது முக்கியமோ அதைத் தேர்ந்தெடுப்பார்கள்: அமைச்சர் சண்முகம்

(படம்: CNA)

சிங்கப்பூரர்களிடையே இரண்டு முக்கிய அக்கறைகள் இருப்பதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார். COVID-19 சுகாதார நெருக்கடி, பொருளியலை அது எவ்வாறு பாதித்துள்ளது ஆகியவை அவை.

"மக்கள் வேலைகளைப் பற்றி கவலை கொண்டுள்ளனர். உலகம் பொருளியல் மந்தநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. யார் இந்த இக்கட்டான காலத்தைக் கடந்துசெல்ல உதவிசெய்வர்? சிங்கப்பூரர்களை யார் கவனித்துகொள்வர்? போன்றவை குறித்து அவர்கள் சிந்திக்கின்றனர்" என்றார் திரு. சண்முகம்.

நீ சூன் குழுத்தொகுதியில் மேற்கொண்ட தொகுதி உலாவிற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் அவ்வாறு கூறினார்.

வட்டாரவாசிகள் நீ சூன் குழுத்தொகுதிக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் ஆர்வமாக உள்ளனர்.

"5 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். தொகுதிவாசிகளுக்கு அது நன்றாகத் தெரியும்"
என்றார் திரு. சண்முகம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்