Images
  • nee soon south

நீ சூன் சவுத் குடியிருப்பாளர்களுக்கு 2022இல் மேம்படுத்தப்பட்ட சமூக மன்றம்

குறைந்த அளவு மின்சாரத்தைப் பயன்படுத்தி, முதுமை மறதி நோயுடையவர்களுக்கு உகந்த வகையில் அமைக்கப்படவுள்ளது நீ சூன் சவுத் சமூக மன்றம். இரு அம்சங்களைக் கொண்டுள்ள முதல் சமூக மன்றம் அது.

2022ஆம் ஆண்டில் காத்திப் பெருவிரைவு ரயில் நிலையத்தின் அருகே அமையும் சமூக மன்றம்.

நீ சூன் சவுத் குழுத்தொகுதியின் Open House நிகழ்வில், குழுத்தொகுதிக்கான ஆலோசகர் திருவாட்டி லீ பீ வா அதனைத் தெரிவித்தார்.

மின்சாரத்தைக் குறைவாகப் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டிகள், விளக்குகளுடன் அறிவார்ந்த எரிசக்தி நிர்வாகக் கட்டமைப்பும் சமூக மன்றத்தில் செயல்படும். அவை 50 விழுக்காடு வரையிலான எரிசக்தியைச் சேமிக்கும்.

முதுமை மறதி நோயுடையவர்கள் வளாகத்தில் எளிமையாக நடமாடக்கூடிய வகையில் கட்டட அமைப்பு இருக்கும்.

வளாகத்தில் ஒவ்வொரு பகுதியும் நிறங்களின் அடிப்படையில் பிரிக்கப்படும். கட்டடத்தின் பதாகைகள் பெரிய எழுத்துகளைக் கொண்டிருக்கும்.

மேம்படுத்தப்பட்ட சமூக மன்றத்தில் பூப்பந்துத் தளம், சமையல் வகுப்பறைகள், அரங்கம் போன்றவை இடம்பெறும்.

Top