Images
  • recruits training
    (படம்: Facebook/Ng Eng Hen)

பாதுகாப்பில்லாத பயிற்சிகளை நிறுத்த ஒவ்வொரு வீரருக்கும் உரிமையுண்டு: தற்காப்பு அமைச்சர் இங்

தேசிய சேவையின்போது பாதுகாப்பற்ற பயிற்சிகளை நிறுத்தச் சொல்ல ஒவ்வொரு வீரருக்கும் உரிமை உண்டு என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தேசிய சேவையாளர்கள் நால்வர் பயிற்சியின்போது மரணமடைந்தைத் தொடர்ந்து பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நலன் குறித்து கவலைப்படுகின்றனர்.

அதன் தொடர்பாக அமைச்சர் இங் பதிலளித்தார்.

தேசிய சேவையாளருக்கோ, அவருடன் இருக்கும் மற்றவருக்கோ பாதுகாப்பற்ற நிலையில் பயிற்சி நடத்தப்பட்டால் அது பற்றித் தயங்காமல் எடுத்துச் சொல்லலாம். அதன் மூலம், பயிற்சிகளைச் சரியான முறையில் மேற்கொள்ளலாம், பெற்றோருக்கும் நிம்மதியைக் கொடுக்க முடியும் என்றார் அவர்.

இதற்கிடையே, முழுநேர தேசிய சேவையாளருக்குப் பயிற்சியின்போது காயம் ஏற்பட்டால், சிகிச்சைக்குரிய முழுச் செலவையும் தற்காப்பு அமைச்சு ஏற்றுக்கொள்ளும் என்று அமைச்சர் இங் தெரிவித்தார்.

அரசாங்க மருந்தகங்கள், மறு சீரமைக்கப்பட்ட அரசாங்க மருத்துவமனைகள், சமூக மருத்துவமனைகள் ஆகியவற்றில் சிகிச்சை பெற்றால் தேவைப்படும் காலம்வரை சிகிச்சைக்கான கட்டணத்தை அமைச்சே செலுத்தும் என்றார் அவர்.  

Top