Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வட கிழக்கு ரயில் பாதையில் அடுத்த ஆண்டிலிருந்து முக்கிய மேம்பாட்டுப் பணிகள்

வட கிழக்கு ரயில் பாதையில் அடுத்த ஆண்டிலிருந்து முக்கிய மேம்பாட்டுப் பணிகள் இடம்பெறவுள்ளன.

வாசிப்புநேரம் -
வட கிழக்கு ரயில் பாதையில் அடுத்த ஆண்டிலிருந்து முக்கிய மேம்பாட்டுப் பணிகள்

(கோப்புப் படம்: TODAY)

வட கிழக்கு ரயில் பாதையில் அடுத்த ஆண்டிலிருந்து முக்கிய மேம்பாட்டுப் பணிகள் இடம்பெறவுள்ளன.

ரயில்களை மேம்படுத்தும் பணி முதலில் இடம்பெறும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

117 மில்லியன் வெள்ளி செலவில் அதனை மேற்கொள்வதற்கான குத்தகை CRRC Nanjing Puzhen நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கி 2024ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்குள் அந்தப் பணி நிறைவுறும் என்று கூறப்பட்டது.

அதனை முன்னிட்டு வட கிழக்கு ரயில் பாதையின் சில பகுதிகளில், குறிப்பிட்ட வேளைகளில் சேவை நேரம் குறைக்கப்படும்.

ஜனவரியிலிருந்து அது நடப்புக்கு வரும். பயணிகள் துணைப் பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்