Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சேவைத் தடைக்கு மன்னிப்புக் கேட்டது NETS நிறுவனம்

சிங்கப்பூர்: பிப்ரவரி 2 அன்று NETS சேவைகளில் ஏற்பட்ட 1 மணி நேரத் தடங்கலுக்காக அந்நிறுவனம் இன்று (பிப்ரவரி 13) மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

வாசிப்புநேரம் -


சிங்கப்பூர்: பிப்ரவரி 2 அன்று NETS சேவைகளில் ஏற்பட்ட 1 மணி நேரத் தடங்கலுக்காக அந்நிறுவனம் இன்று (பிப்ரவரி 13) மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களிடமும் வணிகர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக செய்தியறிக்கை ஒன்றில் அது தெரிவித்தது.

சேவைகள் சீர்செய்யப்பட்டதாகவும் அவை தற்போது வழக்கம்போல் செயல்படுவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டது.

சேவைகள் தடைபட்டதற்குப் பாதுகாப்புப் பிரச்சினைகளோ சேவை முறையில் உள்ள அபாயமோ காரணமல்ல என்று நிறுவனம் சொல்லிற்று.

மனிதத் தவறே காரணம் என்று அது கூறியுள்ளது.

நிறுவனம் தான் நடத்திய விசாரணையின் முடிவுகளை சிங்கப்பூர் நாணய வாரியத்திடம் சமர்ப்பித்துள்ளது.

வருங்காலத்தில் இத்தகைய சம்பவங்களைத் தவிர்க்கும் நோக்கில் நடைமுறைகளை மேம்படுத்துவதற்கு நிறுவனம் சுயேச்சையான ஆலோசகரை அமர்த்தியுள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்