Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ரயில், பேருந்துக் கட்டணங்களுக்குப் பயணிகள் இனி NETS அட்டையைப் பயன்படுத்தலாம்

பயணிகள், பொதுப் போக்குவரத்துக் கட்டணங்களைச் செலுத்த இனி NETS அட்டையைப் பயன்படுத்தலாம்.

வாசிப்புநேரம் -
ரயில், பேருந்துக் கட்டணங்களுக்குப் பயணிகள் இனி NETS அட்டையைப் பயன்படுத்தலாம்

(படம்: Ahmad Khan)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பயணிகள், பொதுப் போக்குவரத்துக் கட்டணங்களைச் செலுத்த இனி NETS அட்டையைப் பயன்படுத்தலாம். இம்மாதம் 16ஆம் தேதி முதல் அது நடப்பிற்கு வரும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

DBS/POSB, OCBC, UOB ஆகிய வங்கிகளின் வாடிக்கையாளர்கள் அத்திட்டத்தில் பயன்பெறலாம். 

Mastercard, Visa ஆகிய அட்டைகளை வைத்திருப்போர், அதனைப் பயன்படுத்தி பயணக் கட்டணங்களைச் செலுத்தி வருகின்றனர்.

TransitLinkஇன் SimplyGo கணக்குடன் பயணிகள் தங்களின் NETS அட்டையை இணைத்துக் கொள்ள வேண்டும். அதன்மூலம் பயணிகள் தங்களின் பயண விவரங்களையும் கட்டணங்களையும் தெரிந்து கொள்ளலாம்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்