Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுப் போக்குவரத்துக் கட்டணங்களுக்கு NETS அட்டையைப் பயன்படுத்த சிலரிடையே தயக்கம்

பொதுப் போக்குவரத்துக் கட்டணங்களுக்குப் பயணிகள் இனி NETS அட்டையைப் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

இருப்பினும், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு இடையே அதிக வரவேற்பு இல்லை.

அவர்கள் Ez-Link அட்டையே பயன்படுத்த விரும்புகின்றனர்.

நேயர்கள் சிலரிடம் பேசியது 'செய்தி'.

பயணக் கட்டணம் செலுத்துவதற்கு ஓர் அட்டை, மற்ற செலவுகளுக்கு NETS அட்டை என்று வகைப்படுத்துவது சிறந்தது. பிள்ளைகள், பயணக் கட்டணத்திற்காக வழங்கப்பட்ட தொகையைப் NETS வழியாக பயன்படுத்தினால், பணத்தை ஒதுக்கி வைக்கும் அளவிற்கு அவர்களுக்குக் கட்டுப்பாடு இருக்குமா என்பது தெரியவில்லை.

-பரிமளா, 53

SimplyGo கணக்குடன் எனது அட்டையை இணைத்துக்கொண்டுதான் கட்டணம் செலுத்தவேண்டுமென்றால், நான் தற்போதுள்ள EZ-Link அட்டையையே பயன்படுத்துவேன்.

-பாலகிருஷ்ணன், 50

EZ-Link அட்டையைப் பயன்படுத்தினால்,கட்டணத் தொகையாக எவ்வளவு கழிக்கப்படுகிறது என்று உடனக்குடன் தெரியும். ஆனால், இந்த முறையைப் பயன்படுத்தினால், கழிக்கப்பட்ட தொகை தெரியாது. SimplyGo கணக்கு வழியாகத் தான் பயண விவரங்களையும் கட்டணங்களையும் தெரிந்து கொள்ளவேண்டும்.

-நாதன், 63

பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் EZ-Link அட்டையைப் பயன்படுத்தியப் பிறகு, பலருக்கு அது வழக்கமாகிவிட்டது.

இருப்பினும், சிலர் புதுமைக்கு ஏற்ப மாறிக்கொள்ளவேண்டும் என்று நம்புகின்றனர்.

NETS அட்டை வழியாக பொருள்கள் மட்டும் வாங்காமல், பயணக் கட்டணமும் செலுத்த முடிந்தால், அனைத்தும் ஒருங்கிணைந்தவாறு இருக்கும். மின்னிலக்க காலத்தில், அனைத்தும் ரொக்கமற்ற பரிவர்த்தனைகளாக இருக்கும்போது, இதையும் நான் வரவேற்கிறேன்.

- மல்லிகா பூப்பதி, 42

Mastercard, Visa ஆகிய அட்டைகள் இல்லாதவர்களுக்கு இச்சேவை உதவும். அதோடு, நான் EZ-Link அட்டையைப் பயன்படுத்தும்போது, அதில் இருக்கும் தொகையைக் கண்காணிப்பது அவசியம். NETS என்றால், அட்டையில் பணம் நிரப்பத் தேவையில்லை.

- சகுந்தலா, 54 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்