Images
  • 3D
    படம்: நிலப் போக்குவரத்து ஆணையம் 

மூத்தோருக்கு உதவும் முப்பரிமாணச் சாலைக் குறியீடுகள்

போக்குவரத்தை மெதுவடையச் செய்யும் நோக்கில் வாம்போ டிரைவில் முப்பரிமாணச் சாலைக் குறியீடுகள் போடப்படவிருக்கின்றன.

இம்மாத இறுதியிலிருந்து 6 மாதத்துக்கு அவை சோதிக்கப்படும்.

ஜப்பானைப் பின்பற்றி நிலப் போக்குவரத்து ஆணையம் இந்த முப்பரிமாணக் குறியீடுகளைப் போடவிருக்கிறது.

இதன் மூலம் சாலைத் தடங்கள் குறுகலாகத் தோன்றும் என அது கூறியது.  

அதன் காரணமாக வாகனமோட்டிகள் பெரும்பாலும் வேகத்தைக் குறைப்பார்கள்.

மூத்தோர் அதிகம் வசிக்கும் பகுதி வாம்போ டிரைவ் Silver Zone.

மூத்தோருக்கு உகந்த Silver Zone பகுதிகளில் விபத்துகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 75 விழுக்காடு குறைந்துள்ளது.

தற்போது அத்திட்டத்தில் 15 சாலைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் 10 சாலைகளில் அதனை நடைமுறைப்படுத்துவது திட்டம்.


Top